Offline
Menu
ஜூனியர் என்டிஆர் கட்அவுட்டுக்கு தீ வைப்பு.. ஆடு பலிக்கொடுத்து தேவரா ரிலீஸ் கொண்டாட்டம்.. சர்ச்சை
Published on 09/28/2024 12:25
Entertainment

ஜூனியர் என்.டி.ஆர்., ஜான்வி கபூர் நடிப்பில் வெளியாகி இருக்கும் புதிய திரைப்படம் “தேவரா.” இந்தப் படம் மூலம் ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் இயக்குநர் கொரட்டலா சிவா இணைந்துள்ளனர். தேவரா படம் மூலம் ஜான்வி கபூர் தென்னிந்திய திரையுலகில் நடிகையாக அறிமுகமாகிறார். உலகளவில் வெளியாகி இருக்கும் தேவரா படத்தின் ரிலீசை ஜூனியர் என்.டி.ஆர். ரசிகர்கள் பெரும் ஆரவாரத்துடன் கொண்டாடினார்.

ஆட்டம், பாட்டம், பெரும் கொண்டாட்டத்தோடு ரிலீசான தேவரா ரசிகர்களின் வரம்பு மீறிய செயல்களால் தேவையற்ற சர்ச்சையில் சிக்கியுள்ளது. தேவரா படம் ரிலீசான திரையரங்க வாயிலில் ஆடு பலியிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திரையரங்கம் முன் ஆட்டை பலியிட்ட ரசிகர்கள் அதன் தலை மற்றும் உடலில் இருந்து சிந்திய இரத்தத்தை தேவரா போஸ்டரின் மீது தேய்த்தனர். இதே போன்று மற்றொரு திரையங்கில் தேவரா படத்தின் கட்-அவுட்டுக்கு தீ வைத்தனர்.

திரைப்பட ரிலீசை ஒட்டி ஆடு பலி கொடுப்பது, கட்-அவுட்டுக்கு தீ வைப்பது போன்ற சம்பவங்கள் கொண்டாட்டத்தை மீறி, திரையரங்கு வரும் மற்ற ரசிகர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக உள்ளது. மேலும், இத்தகைய சம்பவங்கள் பொது அமைதிக்கு தீங்கு விளைவிக்கும் வாய்ப்புகளும் அதிகம்.

Comments