Offline
Menu
கோலாலம்பூர்- காராக் நெடுஞ்சாலையில் ஏழு வாகனங்களை உட்படுத்திய விபத்து; மூவர் பலி- மூவர் படுகாயம்
Published on 09/30/2024 17:43
News

கோலாலம்பூர்:

இன்று அதிகாலையில் கோலாலம்பூர்- காராக் நெடுஞ்சாலையின் 42 ஆவது கிலோமீட்டரில் ஏழு வாகனங்களை உட்படுத்திய ஒரு கோர விபத்தில் மூவர் உயிரிழந்ததுடன், மூவர் படுகாயமடைந்தனர்.

இந்த சாலை விபத்தில் நான்கு கார்கள், ஒரு டிரெய்லர் மற்றொரு லோரி என்பன விபத்தில் சிக்கியதாகவும், அதிகாலை 4.13 மணிக்கு இந்த சம்பவம் நிகழ்ந்ததாகவும் பகாங் மாநில தீயணைப்பு துறையின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

மொத்தம் 9 ஆண்கள் மற்றும் 4 பெண்களை உட்படுத்திய இச் சாலைவிபத்தில் முஹமட் ரிட்சுவான் சுல்கஃப்ளி, முஹமட் ஸைமி ஷரிஃப், முஹமட் அஸிஸுல் ஃபித்ரி ஆகிய மூவர் மரணமடைந்தனர் என்று அவர் கூறினார்.

மேலும் இவ்விபத்தில் சிக்கிய டிரெய்லர் லோரி ஒன்று முற்றிலுமாக எரிந்து சாம்பலானது.

விபத்தில் படுகாயமடைந்த இரு பெண்கள் மற்றும் ஒரு ஆண் ஆகியோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்து குறித்த காரணங்கள் தொடர் விசாரணையில் உள்ளதாக அவர் மேலும் கூறினார்.

 

Comments