Offline
Menu
முன்னணி வேடம் தருகிறேன்; ஆனால்… தயாரிப்பாளர் நிபந்தனையால் அதிர்ச்சி அடைந்த நடிகை
Published on 10/21/2024 01:07
Entertainment

புனே,ஷெர்தில் ஷெர்கில் என்ற பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்து, ரசிகர்களின் கவனம் பெற்றவர் இந்த நடிகை. நடிக்க வந்த புதிதில் இவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

நடிக்க வேண்டும் என்ற கனவுடன் இந்த துறையில் காலடி எடுத்து வைத்த அவருக்கு எதிர்பாராத அதிர்ச்சி காத்திருந்தது. அவரிடம், பட தயாரிப்பாளர் ஒருவர் வழக்கத்தில் இல்லாத சலுகை ஒன்றை கூறியுள்ளார். தொலைக்காட்சி நடிகையான ஆயிஷா கபூருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டு உள்ளது.

அந்த தயாரிப்பாளர், அவருடைய தயாரிப்பில் முன்னணி வேடம் ஒன்றில் நடிக்க ஆயிஷாவுக்கு வாய்ப்பு வழங்க முன்வந்துள்ளார். ஆனால் கூடவே ஒரு நிபந்தனையும் விதித்துள்ளார். இதன்படி, தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும். அதற்கு சம்மதம் என்றால் அந்த முன்னணி வேடத்தில் நடிக்கலாம் என்று கூறி அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறார்.

ஒருபுறம் நீண்ட நாள் கனவு, நனவாக போகிறது என்ற மகிழ்ச்சி ஏற்பட்டபோதும், தயாரிப்பாளரின் நிபந்தனையால் அது காணாமல் போனது. ஆயிஷாவின் மகிழ்ச்சி சிறிது நேரமே நீடித்துள்ளது. ஆயிஷா தயங்கியபடி இருந்திருக்கிறார். ஆனால் தயாரிப்பாளரோ தொடர்ந்து, ஆடம்பர வாழ்க்கை வாழலாம் என ஆயிஷாவுக்கு ஆசையும் காட்டியிருக்கிறார். முடிவு ஆயிஷாவிடமே விடப்பட்டது.

ஆனால், அவரை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று ஆயிஷா கூறியிருக்கிறார். இதனால், உடனடியாக அந்த நிகழ்ச்சியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார். நடிகையாக வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். ஆனால், என்னுடைய பயணம் அவ்வளவு எளிதில் அமைந்து விடவில்லை. தொடக்கத்தில் நான் சந்தித்த நபர்கள் என்னை தவறாகவே வழிநடத்தினர் என்றார்.

திரையுலகம் வெளியில் இருந்து பார்க்கும்போது, கவர்ச்சியாக, வண்ணங்கள் நிறைந்த ஒன்றாக தோன்றும். ஆனால் உண்மை முற்றிலும் வேறாக உள்ளது என ஆயிஷா கூறுகிறார்.

 

Comments