Offline
Menu
‘சிட்டாடல்’ தொடரில் நடிக்க விரும்பாத சமந்தா- ஏன் தெரியுமா?
Published on 10/21/2024 01:08
Entertainment

சென்னை,தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையான சமந்தாவுக்கு தமிழ், தெலுங்கு திரை உலகில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் தற்போது ‘சிட்டாடல்: ஹனி பன்னி’ என்ற வெப் தொடரில் நடித்து முடித்துள்ளார். இந்த தொடரில் நடிகர் வருண் தவான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சிக்கந்தர் கெர், எம்மா கேனிங், கே கே மேனன் மற்றும் சாகிப் சலீம் ஆகியோர் குறிப்பிடத்தக்க வேடங்களில் நடித்துள்ளனர்.

ஆக்சன் திரில்லர் நிறைந்த இந்த தொடரை இயக்குனர் ராஜ் மற்றும் டிகே இயக்கியுள்ளர். இந்த வெப் தொடருக்காக நடிகை சமந்தா கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது. தற்போது, இந்த தொடரின் புரமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.

அப்போது நடந்த நேர்காணல் ஒன்றில் சமந்தா பேசுகையில், ‘ இந்த தொடரில் பல கடினமான ஆக்சன் காட்சிகள் உள்ளன. இதனால், என்னால் அதை செய்ய முடியுமா என்று எனக்கு தெரியவில்லை. அந்த சமயத்தில்தான் எனக்கு மயோசிடிஸ் இருப்பதும் கண்டரியப்பட்டது. இதனால், இதில் நடிக்க விரும்பாமல் இயக்குனர் ராஜ் மற்றும் டிகே ஆகியோரிடம் நான் விலகுவதாக கூறினேன்.

எனக்கு பதிலாக பல நடிகைகளையும் பரிந்துரைத்தேன். ஆனால், அது எதையும் அவர்கள் பரிசீலிக்கவில்லை, என் மீது மட்டுமே அவர்கள் உறுதியாக இருந்தனர்’ என்றார். இந்த தொடர் அடுத்த மாதம் 7-ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Comments