Offline
Menu
பைத்தியக்காரத்தனத்தால் படுக்கையில் இருக்கிறேன் : ரகுல் பிரீத் சிங் வருத்தம்
Published on 10/21/2024 01:11
Entertainment

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த ரகுல் பிரீத் சிங் இப்போது பாலிவுட்டில் அதிகம் நடித்து வருகிறார். தமிழில் கடைசியாக இந்தியன் 2 படத்தில் நடித்திருந்தார். அடுத்து இந்தியன் 3 படம் வெளியாகிறது. பாலிவுட்டில் தற்போது அஜய் தேவ்கனுடன் ‘தேதே பியார்தே 2’ என்ற ஹிந்தி படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்காக கடும் உடற்பயிற்சி செய்து வருகிறார்.

சில நாட்களுக்கு முன்பு ஜிம்மில் பாதுகாப்பு பெல்ட் பயன்படுத்தாமல் 80 கிலோ எடை தூக்கி பயிற்சி செய்துள்ளார். அப்போது அவருக்கு முதுகு தசை பிசகி உள்ளது. வலி அதிகமானதால் டாக்டரை சந்தித்து சிகிச்சை பெற்று படுக்கையில் ஓய்வு எடுத்து வருகிறார்.

இதுகுறித்து ரகுல் பிரீத் சிங் வெளியிட்டுள்ள வீடியோவில், “நான் பைத்தியக்காரத்தனமாக செய்த வேலையால் முதுகுவலி அதிகமாகி ஆறு நாட்களாக படுத்த படுக்கையில் இருக்கிறேன். இப்படி படுக்கையில் இருப்பது எனக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. முழுமையாக குணமடைய இன்னும் ஒரு வாரம் ஆகலாம் என்கின்றனர். இது ஒரு பாடம். நமது உடல் ஏதேனும் சிக்னல் கொடுத்தால் அதை கண்டுகொள்ளாமல் இருக்கக்கூடாது என்று புரிந்து கொண்டேன். எனது உடல்நிலை குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி” என்று பேசி உள்ளார்.

Comments