Offline
Menu
பாடல் ரீமிக்ஸ் கலாசாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஏ.ஆர் ரகுமான்
Published on 10/29/2024 10:44
Entertainment

தமிழ் திரையுலகில் சமீப காலமாக பாடல் ரீமீக்ஸ் கலாசாரம் அதிகரித்து வருகிறது. பழைய படங்களில் இடம் பெற்ற பாடல்களை ரீமிக்ஸ் செய்து புதிய படங்களை இடம் பெறச் செய்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் பாடல்களும் ரீமீக்ஸ் செய்யப்பட்டு உள்ளன. பாடல்களை ரீமிக்ஸ் செய்ய ஆதரவும் எதிர்ப்பும் உள்ளது. இந்த நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பாடல் ரீமிக்ஸ் கலாசாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ”6 வருடங்களுக்கு முன்பு வந்த பழைய பாடல்களை இப்போது காப்பி அடித்து ரீமிக்ஸ் செய்கிறார்கள். அதை பெருமையாகவும் பேசுகிறார்கள். அப்படி பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்வது மிகவும் தவறு. ஒரிஜினல் பாடலை உருவாக்கியவர்களின் அனுமதியை பெறாமல் பாடலை ரீமிக்ஸ் செய்வது சரியல்ல. தற்போது இசையில் ஏ.ஐ தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. வரும் நாட்களில் இது பல பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும். இதனால் நிறைய பேர் வேலை இழக்கும் சூழ்நிலை ஏற்படலாம்” என்றார்.

Comments