Offline
Casting Call – நடிக்க ஆசையா?
Published on 11/11/2024 16:33
Entertainment

இந்தாண்டு விஜய் சேதுபதி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மகாராஜா. இப்படம் விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படமாக அமைந்தது. திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூலில் 100 கோடி ரூபாயை கடந்தது. இப்படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனம தயாரித்தது.

கடந்த ஆண்டு ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்.எஸ் பாஸ்கர் நடிப்பில் வெளியான பார்க்கிங் திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தையும் பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்தது.

இதைத் தொடர்ந்து கீர்த்து சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் ரிவாலவர் ரீட்டா மற்றும் பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் பென்ஸ் திரைப்படத்தையும் பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் அவர்கள் அடுத்து தயாரிக்க போகும் திரைப்படத்திற்காக காஸ்டிங் கால் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிப்பு திறமை கொண்டவரகள், நடிப்பதற்கான ஆசையுள்ளவர்கள் உங்களின் போர்ட்ஃபோலியோவை passionroutecastingcall@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளபடுகிறது. ஆடிஷன் நடக்கும் நாள் நவம்பர் 18 மற்றும் 19 காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைப்பெறவுள்ளது.

 

Comments