Offline
கங்குவா படம் எப்படி இருக்கு தெரியுமா.. முதல் விமர்சனம் இதோ
Published on 11/15/2024 00:58
Entertainment

ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் கே.ஈ. ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் பாலிவுட் நட்சத்திரங்களான திஷா பாட்னி மற்றும் பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர். சமீபத்தில் கங்குவா படம் சென்சார் செய்யப்பட்டது.

இப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் கங்குவா படத்தின் ரன் டைம் 2 மணி நேரம் 34 நிமிடங்கள் என உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், படத்தை பார்த்த சென்சார் குழுவினர், படக்குழுவை மனதார பாராட்டியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

படம் மிகவும் பிரமாண்டமாக இருக்கிறது என்று தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் இப்படம் அமையும் என்றும் கூறியுள்ளார். மேலும் சூர்யாவிற்கு மிகப்பெரிய வெற்றி படமாக கங்குவா அமையும் என்றும் சென்சார் குழு புகழ்ந்ததாக தகவல் வெளிவந்துள்ளது

சென்சார் குழுவிடம் இருந்து பாராட்டுகளை பெறுவது என்பது எளிதல்ல. அவர்களிடம் இருந்து வெளிவந்த விமர்சனத்தில் பாராட்டுக்கள் உள்ள நிலையில் படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Comments