Offline

LATEST NEWS

சிலாங்கூரில் கடந்த 21 மாதங்களில் 1,354 சட்டத்திற்கு புறம்பான கர்ப்பங்கள் பதிவு
Published on 11/22/2024 15:36
News

ஜனவரி 2023 முதல் இந்த ஆண்டு செப்டம்பர் வரை மாநிலத்தில் மொத்தம் 1,354 திருமணத்திற்குப் புறம்பான பதின்ம வயது கர்ப்பங்கள் பதிவாகியுள்ளதாக சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.

சிலாங்கூர் சுகாதாரத் துறையின்படி, 2023 ஆம் ஆண்டில் 799 வழக்குகளும், இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 555 வழக்குகளும் பதிவாகியுள்ளன என்று மாநில மகளிர் மேம்பாடு மற்றும் சமூக நலக் குழுத் தலைவர் அன்ஃபால் சாரி தெரிவித்தார்.

இந்த ஆண்டு, செப்டம்பர் வரை, சிலாங்கூரில் 555 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன – 10-14 வயதுக்குட்பட்டவர்களில் 13, 15 முதல் 17 வயதுக்குட்பட்ட 157, மற்றும் 18 முதல் 19 வயதுக்குட்பட்ட 385 வழக்குகள் என்று வழங்கல் மசோதா 2025 மீதான விவாதத்தை முடிக்கும்போது அவர் கூறினார். இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் திருமணத்திற்கு புறம்பான பதின்ம வயதினரின்  கர்ப்பத்தை சமாளிப்பது குறித்த வட்டமேசை விவாதம் நடத்தப்படும் என்றார்.

வனிதா பெர்டயா சிலாங்கூர், சிலாங்கூர் சமூக நல சேவைகள் துறை மற்றும் Bayt Al-Rahmah நலன்புரிச் சங்கத்துடன் இணைந்து, விரிவான தீர்வுகளைக் கொண்டு வர இந்த வட்டமேஜையை ஏற்பாடு செய்வதாக அவர் கூறினார்.

18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினரை உள்ளடக்கியதால், அரசாங்கம் இதை ஒரு தீவிரமான பிரச்சினையாகக் கருதுவதாக அன்ஃபால் கூறினார்.

சிலாங்கூர் சமூக நல சேவைகள் துறை, சிலாங்கூர் கல்வித் துறை, காவல்துறை மற்றும் மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகத் துறை ஆகியவற்றுடன் இணைந்து, குழந்தை பாதுகாப்பு ஆலோசனை திட்டத்தையும் அரசு தொடங்கியுள்ளது. இந்த திட்டம் குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாப்பை கற்பிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Comments