Offline

LATEST NEWS

ஏர் இந்தியா பெண் விமானி தற்கொலை – காதலன் கைது
Published on 11/29/2024 02:18
News

மும்பை,உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் சிரிஷ்டி துலி(25), ஏர் இந்தியா நிறுவனத்தில் விமானியாக பணியாற்றி வந்தார். இவர் மராட்டிய மாநிலம் மும்பையில் அந்தேரி பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். முன்னதாக டெல்லியில் விமானியாக பயிற்சி பெற்றபோது, ஆதித்யா பண்டிட்(27) என்ற நபருடன் சிரிஷ்டிக்கு பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

இந்த நிலையில், நேற்றைய தினம் பெண் விமானி சிரிஷ்டி, தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். சிரிஷ்டியின் காதலர் ஆதித்யா பண்டிட், அவரை அடித்து துன்புறுத்தி வந்ததாகவும், சிரிஷ்டியை அசைவ உணவு சாப்பிடக் கூடாது என்று கட்டாயப்படுத்தியதாகவும் போலீசாரிடம் சிரிஷ்டியின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, தற்கொலைக்கு தூண்டியதாக ஆதித்யா பண்டிட் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை 29-ந்தேதி வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Comments