கோலாலம்பூர்:
பெட்டாலிங் ஜெயாவில் உள்ள டாமன்சாரா டாமாய் பகுதியில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 6.45 மணியளவில் பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் (IPD) குழுவால் 40 வயதான அந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஷாருல்நிஜாம் ஜாஃபர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
அவரை சோதனையிட்டதில் 0.21 கிலோ எடையுள்ள கஞ்சா என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது என்றும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மொத்த மதிப்பு RM6,300 என்றும் அவர் கூறினார்.
“ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952 இன் பிரிவு 39B இன் கீழ் விசாரிக்கப்படும் இந்த வழக்கில் , சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட சிறுநீர் பரிசோதனையில் சந்தேக நபர் கஞ்சா பயன்படுத்தி இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் சந்தேக நபர் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஒரு பள்ளியின் ஆசிரியர் என்றும், அவருக்கு முந்தைய குற்றப்பதிவு எதுவுமில்லை என்றும் அவர் சொன்னார்.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 117 இன் கீழ் டிசம்பர் 1 ஆம் தேதி வரை சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க “பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,” என்று அவர் கூறினார்