Offline
Menu
காரின் டயர் வெடித்த விபத்தில் புதிதாக பொறுப்பேற்க சென்ற இளம் ஐபிஎஸ் அதிகாரி பலி
Published on 12/03/2024 22:33
News

ஹாசன்: கர்நாடக மாநில கேடரின் ஐபிஎஸ் அதிகாரி ஹர்ஷ்பர்தன் (27). 2023 பேட்சை சேர்ந்த இவர் சமீபத்தில் கர்நாடக போலீஸ் அகாடமியில் தனது நான்கு வார பயிற்சியை முடித்தார். இதையடுத்து அவர் ஹாசன் உதவி காவல் கண்காணிப்பாளர் (ஏஎஸ்பி) பதவியில் நியமிக்கப்பட்டார். இந்த பதவியில் பொறுப்பேற்க ஹர்ஷ் பர்தன் போலீஸ் காரில் சென்றார். ஹாசனில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில், ஹர்ஷ் பர்தன் பயணித்த காரின் டயர் திடீரென வெடித்தது. விபத்தில் சிக்கிய கார் சாலையோரத்தில் இருந்த தென்னை மரத்தில் மோதி அருகிலுள்ள வீட்டில் மோதியது. அங்கிருந்தவர்கள் ஹர்ஷ் பர்தனை உடனடியாக மீட்டு ஹாசனில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஹர்ஷ் பர்தா உயிர் இழந்தார். கார் ஓட்டுநருக்கு லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டன. அவர் சிகிச்சை பெற்று வருகிறார். மத்தியப் பிரதேச மாநிலம் தோசர் கிராமத்தைச் சேர்ந்த ஹர்ஷ் பர்தனின் தந்தை சப்கலெக்டராக உள்ளார்.

Comments