Offline
ரஜினி பிறந்த நாளில் கீர்த்தி சுரேஷ் திருமணம்!
Published on 12/07/2024 00:35
Entertainment

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், தனது 15 ஆண்டுகால காதலரான ஆண்டனி என்பவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். குறிப்பாக, தனது இன்ஸ்டாகிராமில் 15 ஆண்டுகளை நிறைவு செய்து விட்டோம். இனியும் தொடர்வோம் என்று அவர் பதிவிட்டு இருந்தார்.

இந்த நிலையில், டிசம்பர் மாதத்தில் கோவாவில் கீர்த்தி சுரேஷ் – ஆண்டனி திருமணம் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், தற்போது அவர்கள் திருமண பத்திரிகை ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், கீர்த்தி சுரேஷ் -ஆண்டனி திருமணம் வருகிற டிசம்பர் 12ம் தேதி கோவாவில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதே டிசம்பர் 12ம் தேதி நடிகர் ரஜினியின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments