ஃபேஸ்புக் வழி மலேசியர்களின் 432 மில்லியன் ரிங்கிட் கொள்ளை; பொறுப்பில்லாத மேத்தா – ஃபாமி சாடல்
தன்னுடைய சமூக ஊடக களமான ஃபேஸ்புக் வழி ஸ்கேம் மோசடியில் மலேசியர்கள் 432 மில்லியன் ரிங்கிட் இழந்திருப்பதற்கு மேத்தா பொறுப்பேற்காதது, வருத்தப்படாதது குறித்து தொடர்புத் துறை அமைச்சர் ஃபாமி ஃபட்ஸில் கடுமையாக சாடினார்.
இந்நிலையில் விரைவில் அமல்படுத்தப்பட இருக்கும் சமூக ஊடக லைசென்ஸ் விவகாரத்தில் மேட்டாவின் கவலையை அவர் புறந்தள்ளினார். மேட்டாவின் இந்த கவலை வெறும் கண் துடைப்புத் தான் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடுமையான விதிமுறைகள் இருந்தாலும் கார் தயாரிப்பாளர்கள் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கார்களை மிக நேர்த்தியாக வடிவமைக்கின்றனர். ஆனால் மேத்தா மட்டும் அதன் போக்கில் தான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்று South China Morning Post எனும் ஏட்டிற்கு வழங்கிய நேர்காணலில் ஃபாமி தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
‘உங்களின் ஃபேஸ்புக் வழி ஸ்கேம் மூலம் 432 மில்லியன் ரிங்கிட் மலேசியர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. இது பற்றி நீங்கள் கொஞ்சம் கூட கவலைப்படவே இல்லை. பொறுப்புணர்வும் அறவே இல்லை. இதயமே இல்லை’ என்று அமைச்சர் மேத்தாவைச் சாடினார்.