Offline
லண்டனில் உள்ள இசைப்பள்ளியின் கௌரவத் தலைவராக ஏர்.ஆர்.ரகுமான்
Published on 12/13/2024 01:41
Entertainment

நியமனம்மணிரத்னம் இயக்கிய ‘ரோஜா’ திரைப்படத்தின் மூலம், வெள்ளி திரையில் தன்னுடைய இசை பணியை துவங்கிய ஏ.ஆர்.ரகுமான் முதல் படத்திலேயே தேசிய விருது நாயகனாக மாறினார். தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்த அவர் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இசையமைத்து உலக புகழ் பெற்றார்.

ஸ்லம் டாக் மில்லினியர் என்ற படத்திற்காக இரண்டு ஆஸ்கார்களை வென்று இந்திய சினிமாவுக்கு பெருமை தேடி தந்ததோடு உலக அளவில் பிரபலமானார். இந்திய சினிமா மட்டுமல்லாமல் உலக அளவில் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் லண்டனில் உள்ள டிரினிட்டி லாபான் இசைப்பள்ளியின் கௌரவத் தலைவராக ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்த பதவியில் 5 ஆண்டுகாலத்திற்கு தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Comments