Offline
அல்லு அர்ஜுனை கைது செய்த போலீஸ்.. வீட்டில் இருந்து அழைத்துச் சென்று விசாரணை
Published on 12/15/2024 13:44
Entertainment

இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இன்று (டிசம்பர் 5) வெளியான திரைப்படம் புஷ்பா 2 தி ரூல்.திரைப்படம் வெளியான நிலையில், புஷ்பா 2 திரைப்படத்தை பார்க்க சென்றபோது ரேவதி என்ற 39 வயது பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்.

உயிரிழந்த பெண்ணின் மகனும் கூட்ட நெரிசலில் சிக்கி காயமுற்ற நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.ஐதராபாத்தில் சிக்கடப்பள்ளியில் சந்தியா திரையரங்கில் இரவு 9.30 மணிக்கு பிரீமியர் காட்சி நடைபெறுவதாக இருந்தது. அதற்கு வந்த அல்லு அர்ஜுனைக் காண கூட்டத்தில் ரசிகர்கள் முண்டியடித்த போது இந்த விபத்து நடந்ததாக தெரிகிறது.

பெண் உயிரிழந்த சம்பவத்தில் திரையரங்கு மீது ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்யபட்ட நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் மீதும் வழக்குப்பதிவு செய்ய போலீஸார்  வழக்குப்பதிவு செய்ய திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில் விசாரணை செய்வதற்காக ஐதராபாத் சிக்கடபல்லி போலீஸார் அல்லு அர்ஜுனை அவரது வீட்டில் இருந்து காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். அவரிடம் தொடர்ந்து 2 மணி நேரமாக விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Comments