Offline
2024 இல் குடும்ப வன்முறை வழக்குகள் 7,000 ஆக உயர்வு
Published on 03/05/2025 12:16
News

2023 ஆம் ஆண்டில் 5,507 குடும்ப வன்முறை வழக்குகள் இருந்த நிலையில், 2024 இல் அந்த எண்ணிக்கை 7,116 ஆக உயர்ந்துள்ளதாக பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு துணை அமைச்சர் நோரைனி அகமது மக்களவையில் தெரிவித்தார்.

சட்ட அமலாக்கத்தை வலுப்படுத்த 1994 வீட்டு வன்முறைச் சட்டம் மற்றும் பிற தொடர்புடைய சட்டங்களில் திருத்தம் செய்ய வேண்டும் என தனது அமைச்சகம் மறுபரிசீலனை செய்யும் என்று அவர் கூறினார்.

மேலும், தேசிய வீட்டு வன்முறைக் குழுவை அமைத்து, அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து வன்முறை வழக்குகளை நிர்வகிப்பதில் கவனம் செலுத்தி வருவதாக அவர் கூறினார்.

Comments