Offline
அடுத்த ஆண்டு 63 நாடுகள் QR குறியீடு பயன்படுத்தும்
Published on 03/05/2025 12:17
News

கோலாலம்பூர்: 63 நாடுகள் மற்றும் ஆசியான் நாடுகளுக்கு சொந்தமான பயணிகள், நீண்டகால வருகை அனுமதிச் சீட்டுகளுடன், அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் மலேசியா எல்லைகளில் QR குறியீட்டு முறையைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார். இதன் மூலம், தற்போது மலேசியர்களுக்கே மட்டும் கிடைக்கும் QR குறியீடு முறையை 63 நாடுகளுக்கும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இது மூலம், பயணிகள் QR குறியீடு முறையை செயலி மூலம் பயன்படுத்தி, தங்களின் பயண நிலையை சரிபார்க்க முடியும். மேலும், தற்போது 172 குடியேற்ற அதிகாரிகள் உள்ள நிலையில், இந்த முறையின் முழு அமலாக்கத்துடன் 68 ஊழியர்கள் மட்டுமே பணியில் இருப்பார்கள் என்று அமைச்சர் கூறினார்.

மலேசிய பாஸ்போர்ட் உலகின் சிறந்த 10 பாஸ்போர்ட்டில் ஒன்று எனவும், பயணிகள் இனி விமான நிலையங்களில் சிக்காமல் தங்கள் பயண நிலையை எளிதில் சரிபார்க்க முடியும் என்றும் அவர் கூறினார்.

Comments