Offline
வியட்நாம் இரு குழந்தைகள் கொள்கை தளர்த்தல் பரிசீலனை
Published on 03/05/2025 12:23
News

வியட்னாம் சுகாதார அமைச்சு, குழந்தைப் பிறப்பின் எண்ணிக்கை மற்றும் இடைவெளிகளை முடிவெடுக்கும் உரிமையை வியட்னாமிய தம்பதிகளுக்கு வழங்க பரிந்துரையை முன்வைத்துள்ளது.

வியட்னாமின் குழந்தைப் பிறப்பு விகிதம் மிகவும் குறைவாக இருப்பதால், அந்த நாட்டின் இரு குழந்தைகள் கொள்கையைத் தளர்த்தும் நோக்கில் பரிசீலனை நடத்தப்படுகிறது.

வியட்னாமின் பிறப்பு விகிதம், புருணை, மலேசியா, தாய்லாந்து மற்றும் சிங்கப்பூரை விட குறைவாக உள்ளது.

வேலை அழுத்தங்கள், நிதி நெருக்கடி, வாழ்க்கை முன்னேற்றம் மற்றும் மாறிவரும் சமுதாயப் பார்வை ஆகியவை குறைந்த பிறப்புக்கு காரணமாக கூறப்படுகிறது.

1999 முதல் 2022 வரை சீராக இருந்த பிறப்பு விகிதம், கடந்த இரண்டு ஆண்டுகளில் வேகமாக குறைந்து 2024 ஆம் ஆண்டில் ஒவ்வொரு பெண்ணுக்கும் 1.91 குழந்தைகள் எனக் குறைந்துள்ளது, இது வியட்னாமின் வரலாற்றில் குறைவான விகிதமாக கருதப்படுகிறது.

Comments