உலகின் மிகவும் பரபரப்பான லண்டன் ஹீத்ரோ அனைத்துலக விமான நிலையம் இன்று இரவு 11.59 மணிவரை இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்துக்கு மின்சாரம் விநியோகிக்கும் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ காரணமாக விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை நள்ளிரவில் தீ ஏற்பட்டதாகவும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், அப்பகுதியில் 200 மீட்டர் சுற்றளவுக்கு தடை உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
மேலும், லண்டன் விமான நிலையத்துக்கு வருகை தரவிருக்கும் அனைத்து விமானங்களும் வேறு விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது. பயணிகள் யாரும் விமான நிலையத்திற்கு வரவேண்டாம் என்றும் சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு விமான நேரத்தை உறுதி செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த விமான நிலையத்தில் இருந்து உலகின் பல்வேறு விமான நிலையங்களுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான விமானங்கள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.