நாட்டில் அதிகமான மாணவர் எண்ணிக்கை பிரச்சினையைத் தீர்க்க பல மாடிகள் கொண்ட பள்ளி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
அதிக மாணவர்கள் கொண்ட பள்ளிகளில் இட நெரிசல் பிரச்சினையைக் களையும் நோக்கில், கார்ப்பரேட்நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் அத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது என அவர் கூறினார்.
இந்த முயற்சி கல்வி வளங்கள் மேலும் கட்டமைப்பை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கு மிகவும் உகந்த கற்றல் சூழலை உறுதி செய்யும்.
தனியார் நிறுவ ஆதரவுடன் மாணவர்களுக்கு டிஜிட்டல் திறன்கள், படைப்பாற்றல் துறைகளில் அதிக கற்றல் வாய்ப்புகளைத் திறக்க விரிவுபடுத்தப்படும்.
புத்ராஜெயாவில் கல்வியமைச்சின் உயர்மட்டத் தலைமையுடனான நேற்றைய சந்திப்பின் முக்கிய சாராம்சம் இதுதான் என்று பிரதமர் கூறினார்.