ஜோகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி 3,964 இல் இருந்து 10 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
மாநிலப் பேரிடர் மேலாண்மை குழுவின் (JPBN) தலைவர் தான் ஸ்ரீ டாக்டர் அஸ்மி ரொஹானி, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் ஐந்து மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,763 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.
இதற்கிடையில் 3,018 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தற்போது ஜோகூர் பாரு, குளுவாங், கூலாய், கோத்தா திங்கி பொந்தியான் ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருக்கும் 98 தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மெட் மலேசியா எனப்படும் வானிலை ஆய்வு மையம் ஜோகூர் பாரு, குளுவாங், மெர்சிங், பொந்தியான், கூலாய், கோத்தா திங்கி ஆகிய ஆறு மாவட்டங்களில் இன்று வரை தொடர்ந்து கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.