Offline
மலாக்கா கவிஞர் செல்வராஜு மரணமடைந்தார்
By Administrator
Published on 03/23/2025 12:42
News

மலாக்கா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் மற்றும் கவிஞர் செல்வராஜு மதலமுத்து (71) நேற்று(20/3/25) வியாழக்கிழமை காலமானார். சில நாட்களாக நோயுற்றிருந்த அவர், தனது இல்லத்தில் காலமானார்.

அவருக்கு எலிஸபத் மனைவியும், இரு மகள்களும், மகனும், மூன்று பேரப்பிள்ளைகளும் உள்ளனர். செல்வராஜு, தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு, இந்திய இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியவர். 9 ஆண்டுகளுக்கு முன் "காப்புறுதி கவிஞர்" விருதும் பெற்றவர்.

அவரது நல்லுடல் நாளை(22/3/25) பிற்பகல் 2 மணிக்கு திருப்பலிக்காக தேவாலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, புக்கிட் ஜெலுத்தோங் கத்தோலிக கல்லறையில் நல்லடக்கம் செய்யப்படும்.

Comments