Offline
Menu

LATEST NEWS

எரிவாயு வெடிப்பு சம்பவ இடத்தை பார்வையிட்ட மாமன்னர்
By Administrator
Published on 04/06/2025 07:00
News

சுபாங் ஜெயா புத்ரா ஹைட்ஸ்,  எரிவாயு குழாய் தீப்பிடித்த இடத்தை சனிக்கிழமை (ஏப்ரல் 5) மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் பார்வையிட்டார். காலை 9.40 மணியளவில் அவ்விடத்திற்கு வந்த மாமன்னரைர ​​சிலாங்கூர் ராஜா மூடா தெங்கு அமீர் ஷா சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா, சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி ஆகியோர்களால் வரவேற்கப்பட்டார்.

மேலும், வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு, அரசின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர், துணைக் காவல் கண்காணிப்பாளர் டத்தோஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை, பெட்ரோனாஸ் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி டான்ஸ்ரீ டெங்கு முஹம்மது தௌபிக் டெங்கு அஜீஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர். சம்பவம் குறித்த விளக்கத்தைப் பெறுவதற்கு முன்பு, சுபாங் ஜெயா நகர சபையின் (MBSJ) நான்கு சக்கர வாகனத்தில் சவாரி செய்து, சம்பவ இடத்தை ஆய்வு செய்தார். சுல்தான் இப்ராஹிம் சம்பவ இடத்தில் ஏற்பட்ட பேரழிவை சுமார் 40 நிமிடங்கள்  வரை பார்வையிட்டார்.

செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 1) காலை 8.10 மணிக்கு ஏற்பட்ட பெட்ரோனாஸ் எரிவாயு குழாயில் ஏற்பட்ட தீ விபத்தில், 30 மீட்டர் உயரத்திற்கு மேல் தீப்பிழம்புகள் உயர்ந்து, வெப்பநிலை 1,000 டிகிரி செல்சியஸை எட்டியது. மேலும் அதை முழுமையாக அணைக்க கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் ஆனது. மொத்தம் 87 வீடுகள் முழுவதும் சேதமானது என்று அறிவிக்கப்பட்டு, ஆக்கிரமிக்கத் தகுதியற்றதாகக் கருதப்படுகிறது மேலும் சேதமடைந்த 148 பாதிக்கப்பட்ட வீடுகள் பழுதுபார்ப்புக்குப் பிறகு வசிக்க முடியும். 300க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்தனர். அவர்கள் இரண்டு நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Comments