ரஷியா-உக்ரைன் போர் 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இப்போரில் ரஷியாவுக்கு ஆதரவாக வடகொரியா தனது ராணுவ வீரர்களை அனுப்பியதாக உக்ரைன் குற்றம்சாட்டி உள்ளது. இந்நிலையில், உக்ரைனின் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷிய ராணுவத்தில் இணைந்து போரிட்ட 2 சீன குடிமக்கள் டொனெட்ஸ்க் பகுதியில் சிறைபிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். அவர்களிடம் ஆவணங்கள், வங்கி அட்டைகள் மற்றும் தனிப்பட்ட தரவுகள் கிடைத்துள்ளதாகவும், சீனாவுடன் தொடர்பு கொள்ள உக்ரைன் வெளியுறவு அமைச்சரை அறிவுறுத்தியதாகவும் அவர் கூறினார். இந்த சம்பவம், சீனா-அமெரிக்கா வர்த்தக போர் தீவிரமாக இருக்கும் நிலையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.