சமூக ஊடகங்களில் உள்ள தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம் மற்றும் சைபர் துன்புறுத்தலிலிருந்து சிறார்களை பாதுகாக்க, 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்க புதிய சட்டம் ஒன்றை நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் முன்மொழிந்துள்ளார். விதிமுறைகளை மீறினால் RM5 மில்லியன் வரை அபராதம் விதிக்கப்படும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவது குறித்த கவலையை எடுத்துரைத்த நிலையில், இந்த புதிய சட்டம் சமூக ஊடக நிறுவனங்களுக்கு பொறுப்புடன் நடக்க வைக்கும் என அரசு கூறியுள்ளது.