குவந்தான்:
நேற்று மாலை தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றிருந்த ஏழு வயது சிறுமி, இங்குள்ள சுங்கை பாலோக்கில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பாக மாலை 4.46 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாக பகாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
உடனே குவந்தான் மற்றும் கெபெங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களைச் சேர்ந்த டைவ் குழு உட்பட மொத்தம் 21 பணியாளர்கள் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
“பொதுமக்களும் தேடுதலில் உதவினர், ஆனால் பாதிக்கப்பட்டவர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை” என்று செய்தித் தொடர்பாளர் தொடர்பு கொண்டபோது தெரிவித்தார்.