Offline
ஆசியான் நாடுகளிலிருந்து மலேசியாவிற்கு வரும் சுற்றுப்பயணிகள் TNG eWallet பதிந்துகொள்ளலாம்
By Administrator
Published on 05/12/2025 09:00
News

2026 மலேசியாவிற்கு வருகை புரியும் ஆண்டை முன்னிட்டு ஆசியான் நாடுகளிலிருந்து மலேசியாவிற்கு வரும் சுற்றுப்பயணிகள், கியூஆர் குறியீடு மூலம் கட்டணம் செலுத்த ‘TNG eWallet- செயலியில் பதிந்துகொள்ளலாம்.

சிங்கப்பூர், புருணை, கம்போடியா, இந்தோனீசியா, லாவோஸ், மியன்மார், பிலிப்பீன்ஸ், தாய்லாந்து, வியட்னாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தோருக்கு இது பொருந்தும்.

‘டச் அண் கோ இ-வாலட்’ செயலிக்குப் பதிந்துகொண்டோர், தங்கள் சொந்த நாட்டில் வங்கிகளால் வழங்கப்பட்ட கடன் அல்லது பற்று அட்டைகளைக் கொண்டு அச்செயலியில் பணம் செலுத்தலாம்.

மேலும் செயலியில் பதிந்துகொள்ள மலேசிய கைப்பேசி எண்ணைப் பயன்படுத்த தேவையிராது.

Comments