பாரிட் புந்தார்: சாலை விபத்தில் உயிரிழந்த FRU வீரர் முகமது அக்மால் (35) இன்று காலை சொந்த ஊரான கோலா குறாவில் நல்லடக்கம் செய்யப்பட்டார். நேற்று நிகழ்ந்த லாரி விபத்தில் 8 சக FRU வீரர்களுடன் அவரும் உயிரிழந்தார். மனைவி, இரு குழந்தைகள் உள்ள அவருக்கு மாமனார் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். நல்ல மாப்பிள்ளையான அவர் அமைதியானவர் என்றும், ஹரி ராயா ஹாஜியை கொண்டாட ஆசைப்பட்டதாகவும் மாமனார் கூறினார். மேலும் 9 FRU வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.