Offline
அமெரிக்காவிடமிருந்து 160 விமானங்களை கொள்முதல் செய்யும் கத்தார்
By Administrator
Published on 05/16/2025 09:00
News

தோஹா,அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் 4 நாட்கள் அரசு முறை பயணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். ஜனாதிபதியாக 2வது முறையாக பதவியேற்றப்பின் டிரம்ப் மேற்கொள்ளும் முதல் மத்திய கிழக்கு பயணம் இதுவாகும். பயணத்தின் முதல் நாளான நேற்று அவர் சவுதி சென்றார். அங்கு சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்தார்.

இந்நிலையில், டிரம்ப் இன்று கத்தார் சென்றார். அவர் கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்தானியை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இரு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

இந்த சந்திப்பின்போது, அமெரிக்காவிடமிருந்து 160 விமானங்களை கொள்முதல் செய்ய கத்தார் ஒப்பந்தம் செய்தது. கத்தார் விமான போக்குவரத்து துறையை மேம்படுத்தும் வகையில் 160 விமானங்களை அமெரிக்காவின் போயிங் விமான நிறுவனத்திடமிருந்து வாங்க ஒப்பந்தம் கையெழுத்தானது. டிரம்ப் , தமீம் சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் இடையே 200 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

Comments