கோலா சுங்கை பாடாங் அருகே மீன்பிடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்த 28 வயது மீனவர் ஒருவர் நேற்றிரவு 9.50 மணியளவில் மின்னல் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். கூட வந்த மீனவர்கள் அவரை கரைக்குக் கொண்டு வந்த நிலையில், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்தார். பலத்த மழை மற்றும் மின்னல் காரணமாக இந்த துயர சம்பவம் நிகழ்ந்தது.