கடந்த ஆண்டு 15 முதல் 30 வயதுக்குட்பட்ட ஒரு லட்சத்து 42 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களின் அடையாள அட்டைகளை காணவில்லை என்று புகாரளிக்கப்படுள்ளன.
இந்த எண்ணிக்கை மிகவும் கவலை அளிப்பதாகக் கூறிய இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹன்னா யோ இதில் ஒரு லட்சத்து 36 ஆயிரம் பேர் அலட்சியத்தாலும் மற்றவர்கள் குற்றச்செயல் மற்றும் இயற்கை பேரிடர் காரணமாகவும் தங்களின் அடையாள அட்டையைத் தொலைத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
அதில் சிலாங்கூர், கோலாலம்பூர், ஜோகூர் ஆகிய பகுதிகளிலேயே அதிக எண்ணிக்கையிலான சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்றும் அவை நகர்ப்புறங்களில் வணிக நடவடிக்கைகளுடன் தொடர்புடையவை என்று அவர் கூறினார்.