சுங்கை படானி: கேதா மாநில சுற்றுச்சூழல் துறை (DoE), பத்தொன்பதாம் தேதியன்று கூரூன் தொழிற்பேட்டியில் செயல்பட்டுவரும் ஒரு மின்-பழுது மற்றும் லித்தியம் பேட்டரி மறுசுழற்சி தொழிற்சாலைக்கு இரண்டு வார தற்காலிக நிறுத்த உத்தரவு பிறப்பித்துள்ளது.துறை இயக்குநர் ஷரீஃபா ஜகியாஹ் செய்தியாளர்களிடம் கூறும்போது, இந்த தொழிற்சாலை தேவையான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA) அனுமதி மற்றும் உரிமங்கள் இல்லாமல் சுமார் 5 மெட்ரிக் டன் பழைய லித்தியம் பேட்டரி மற்றும் 26 மெட்ரிக் டன் மின்-பழுதுகளை சட்டவிரோதமாக சேமித்து, செயலாக்கி வந்தது தெரியவந்தது.இந்த நிறுவனத்துக்கு முந்தைய காலத்திலும் அதேபோன்ற குற்றங்கள் காரணமாக நீதிமன்றத்தில் வழக்குப் பதிவாகி இருந்தது என்றும், சட்டப்பூர்வமாக இயங்க உத்தரவிடப்பட்டும் அவை புறக்கணிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.சட்டவிதிகளின்படி:உரிமம் இல்லாமல் செயல்பட்டால்,RM25,000 முதல் RM250,000 வரை அபராதம் அல்லது 2 ஆண்டுகள் வரை சிறை EIA விதிமுறைகளை மீறினால், RM100,000 முதல் RM1 மில்லியன் வரை அபராதம் மற்றும் 5 ஆண்டுகள் வரை கட்டாய சிறை*அனுமதி இல்லாமல் கழிவுகள் சேமித்தால், RM100,000 முதல் RM10 மில்லியன் வரை அபராதம் மற்றும் 5 ஆண்டுகள் வரை சிறை என தண்டனை விதிக்கப்படும்.