நகரம்-கிராமம் இடையேயான கல்வி வித்தியாசத்தை குறைத்தால்தான் நாட்டின் நீண்டகால வளர்ச்சியும், மக்கள் எதிர்காலமும் உறுதி செய்ய முடியும் என கல்வியாளர்கள் கூறுகின்றனர். யூபிஎம் ஆசிரியர் வான் மார்சுகி, கிராமப்புற பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள், இணைய இணைப்பு, தரமான ஆசிரியர்கள், கல்வி-சுகாதாரம்-தொழில்முனைவோர் ஒருங்கிணைந்த திட்டங்கள் தேவை என்றும், தொழில்நுட்ப மற்றும் தொழில் கல்வி (TVET) வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார். யுகேஎம் உதவி இயக்குநர் அனுவார் அகமத், பழுதான பள்ளிகளை சீரமைத்தல், புதிய ஆசிரியர்களை நியமித்தல், வறுமைக் கோட்டிற்கட்பட்ட மாணவர்களுக்கு அதிக உதவி, எதிர்காலம் நோக்கிய வகுப்புத் திட்டங்கள் ஆகியவை அவசியம் எனக் கூறினார். அதிக கல்வி நிதியுதவி தேவைப்பட்டாலும், மாணவர்களின் தேவையை அடிப்படையாகக் கொண்ட இலக்குத்தன்மையுடைய உதவிகளே மேன்மையான முதலீடாக இருக்கும் என்றும், கண்காணிப்பு முறைமைகள் அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.