இந்தாண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் 10,000 மின்சார வாகன (EV) சார்ஜிங் நிலையங்களை நிறுவ மலேசியா இலக்கு வைத்துள்ளதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபடில்லா யூசோஃப் தெரிவித்தார்.
இதன்முலம் மலேசியா மின்சார வாகனங்களுக்கான ஊக்குவிப்பை வலுப்படுத்தும் அதே வேளையில் மின்சார வாகன உற்பத்தி மற்றும் புதுமைகளை வரவேற்கும் ஒரு பிராந்திய மையமாக மாற விரும்புவதாக
மின்சார மாற்றம் மற்றும் நீர் மாற்ற அமைச்சராகவும் பணியாற்றும் உள்ள ஃபடில்லா கூறினார்.
“மின்சார வாகன விற்பனையை அதிகரிக்கவும், வளர்ந்து வரும் இந்த பிரிவில் சாத்தியமான முதலீட்டாளர்களை ஈர்க்கவும் நாடு தழுவிய ரீதியில் மின்சார சார்ஜிங் செய்யும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது என்றார்.
“இந்த ஆண்டு இறுதிக்குள் சபா மற்றும் சரவாக் உட்பட மலேசியா முழுவதும் சுமார் 10,000 சார்ஜிங் நிலையங்களை அமைப்பதே எங்கள் இலக்கு” என்று அவர் நேற்று வியாழக்கிழமை தாய்லாந்தில் மலேசிய புலம்பெயர்ந்தோருடன் நடந்த ஒரு இரவு விருந்தில் உரையாற்றும்போது கூறினார்.