இந்த ஆண்டில் மட்டும் கேரளாவில் 2,450 பேர் டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 15 பேர் உயிரிழந்துள்ளனர். வெப்பநிலை உயர்வும், ஏடிஸ் கொசுக்களின் இனப்பெருக்கமும் டிங்கி பரவலை அதிகரிக்கச் செய்துள்ளன.
கோடை மழையையடுத்து டிங்கி பரவல் வேகமடைந்துள்ள நிலையில், மென்மையான அறிகுறிகள் காரணமாக பலர் கவனிக்காமல் விடுவதும் முக்கிய சிக்கலாக உள்ளது.2023-இல் மட்டும் 20,568 பேருக்கு தொற்று உறுதியாகி, 53,688 பேர் சந்தேகிக்கப்பட்டனர்.