ஏராட் ஏரோஸ்பேஸ் டெக்னாலஜி (AAe) மற்றும் அசெண்ட் ஏர்வேஸ் மலேசியா (AMY) இடையில் போயிங் B737 விமான பராமரிப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. லங்காவியில் நடைபெற்ற லிமா'25 கண்காட்சியில் இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.இந்த ஒப்பந்தத்தின் கீழ், AAe AMY-வின் ACMI இயக்கங்களுக்கு பராமரிப்பு சேவைகளை வழங்கும். AAe தலைமை செயல் அதிகாரி டத்தோ ஃபிர்ஹாட் உசீர், இந்த ஒப்பந்தம் மலேசியாவின் விமான துறையை வலுப்படுத்தும் ஒரு முக்கிய முன்னேற்றம் என தெரிவித்துள்ளார்.AMY தலைமை செயல் அதிகாரி ஜெர்மல் சிங் AAe-வின் நம்பகத்தன்மை மற்றும் தொழில்நுட்ப திறமையை பாராட்டியுள்ளார்.