UMNO-விலிருந்து விலகி பிகேஆர் கட்சியில் சேர விண்ணப்பித்ததைத் தொடர்ந்து, இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என்ற வதந்திகளை டத்தோஸ்ரீ டெங்க்கூ ஸாஃப்ரூல் மறுத்துள்ளார். "முடிவெடுக்கும் போது எந்தத் தேர்தல் பற்றியும் விவாதம் நடந்ததில்லை," என்றும், "அவசியமில்லாமல் இடைத்தேர்தல் நடத்துவதை ஆதரிக்கவில்லை," என்றும் தெரிவித்தார்.
2025 டிசம்பர் வரை செனட்டராக தொடருவார் எனவும், அமைச்சராக இருக்கும்பது பிரதமரின் முடிவாகும் என்றும் கூறிய அவர், பதவிக்கு முக்கியத்துவம் இல்லாமல் நாட்டுக்காக பணியாற்றத் தயாராக உள்ளதாகக் குறிப்பிட்டார். உம்னோவின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தும், பிகேஆர் சேர்க்கை தனிப்பட்ட முடிவாகும் என்றும் விளக்கியுள்ளார்.