சரவாக், இரண்டு யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்கள் கொண்ட மாநிலமாக, தனது டெல்டா ஜியோபார்க் திட்டத்தை யுனெஸ்கோ உலக ஜியோபார்காக பதிவு செய்ய முயற்சிக்கிறது.அதற்கான மதிப்பீடு ஜூன் 23-26 வரை நடைபெற உள்ளது. மதிப்பீட்டாளர்கள் போர்னியோ கலாச்சார அருங்காட்சியகம், புகிட் மராஸ் மற்றும் சுங்கை ஜாங் தொல்லியல் தளங்கள் போன்ற முக்கிய இடங்களை பார்வையிடுவர்.சரவாக் சுற்றுலா அமைச்சகம், பராமரிப்பு, வளர்ச்சி மற்றும் கல்வி ஆகியவற்றை இணைத்து, ஜியோபார்க் சுற்றுலாவை வளர்க்க திட்டமிட்டுள்ளது.இத்தகைய முன்னேற்றங்கள், சரவாக் சுற்றுலா துறைக்கு பெரும் வளர்ச்சி வாய்ப்புகளை வழங்கும் என அமைச்சு தெரிவித்துள்ளது.