13வது மலேசியத் திட்டம் (13MP) ஜூலை 28 அன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது என்று ஒருமைப்பாட்டு அரசின் பேச்சாளர் மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் டத்தோக் பாஹ்மி பாஜில் தெரிவித்துள்ளார்.இன்றைய அமைச்சரவை கூட்டத்தில், பொருளாதார அமைச்சின் தலைமை செயலாளர் டத்தோக் நோர் அஸ்மி டிரோன் திட்டத்தின் மசோதாவை வழங்கியதாகவும், இதைப் பிரதமர் டத்தோக் ஸ்ரீ அன்வார் இப்ராகிம் அனைத்து அமைச்சுகளும் முழுமையான ஆய்வு செய்து கருத்து தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டதாகவும் பாஹ்மி கூறினார்.