விற்பனை மற்றும் சேவை வரி (SST) விரிவாக்கம் குறித்த பொதுமக்களின் கவலையை அரசு கவனத்தில் எடுத்துள்ளது என தகவல் தொழில்நுட்ப அமைச்சர் டத்தோக் பாஹ்மி பாஜில் தெரிவித்துள்ளார்.ஜூன் 18 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இது விரிவாக பேசப்படவில்லை என அவர் தெரிவித்தாலும், நிதி அமைச்சர் II டத்தோக் சிரி அமீர் ஹம்சா அஜிசான் விரைவில் முழுமையான விளக்கம் வழங்குவார் என கூறினார்.
“SST மூலம் கிடைக்கும் வருவாய்கள் பள்ளிகள், மருத்துவமனைகள் போன்ற அடிப்படை பொது உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு பயன்படுத்தப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.