மலேசியாவின் எடியூசிட்டி இஸ்கண்டாரில் நடைபெற்ற ஆசியா சர்வதேச இளம் ரோபாட்டிக்ஸ் போட்டி (IYRC) 2025-ல், ஜோகூர் தாமான் துன் அமினா தமிழ்ப்பள்ளி மாணவி சன்சுவர்னா கணபதி தலைமை வகித்த குழு "படைப்பாற்றல் வடிவமைப்பு - மூத்த பிரிவு"யில் முதல் இடத்தை வென்று சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது.“வனக் காப்பாளர்” எனும் தீ அணைக்கும் ரோபோவை உருவாக்கிய இவர்களது கண்டுபிடிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கியத்துவம் வாய்ந்ததாக வல்லுநர்களால் பாராட்டப்பட்டது. மலேசியாவுக்கு பெருமை சேர்த்த இந்த வெற்றி, STEM துறையில் இளைஞர் சாதனைகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.