மாநகரம், கைதி, விக்ரம் படங்களுடன் ட்ரெண்ட் செட்டர் ஆன லோகேஷ் கனகராஜ் தற்போது கூலி படத்தை இயக்கி வருகிறார். பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்தில், முக்கிய கேமியோ ரோலில் அமீர்கான் கலந்து கொண்டது ரகசியமாக வைக்க திட்டமிட்டிருந்தார் லோகேஷ்.
அமீர்கான் இருப்பது படம் வெளியாகும் வரை வெளிவரக்கூடாது என லோகேஷ் விரும்பினார். ஆனால், "கேமரா முன் பொய் சொல்ல முடியாது" என அமீர்கான் சொல்லியதால் லோகேஷ் மனம் வருந்தி, தகவலை வெளியில் சொல்லி விட்டார்.
இது பற்றியே அவர் சமீபத்திய பேட்டியில் நக்கலாக பகிர்ந்துள்ளார். படம் வெளியாகியிருந்தால் தான் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கிடைத்திருக்கும் எனவும் கூறினார்.