மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அபிராமி உள்ளிட்ட நட்சத்திரங்களுடன் உருவான ‘தக் லைஃப்’ படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மன் இசை அமைத்திருந்தார். ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தும், கமல்–த்ரிஷா ரொமான்ஸ் காட்சிகள் சர்ச்சை ஏற்படுத்தியதால் படம் தியேட்டரில் வசூலில் தோல்வி கண்டது.
அதேபோல் கடுமையான விமர்சனங்கள், ட்ரோல்கள் வந்தபோதும், படம் OTT-யில் கலக்கியது. நெட்பிளிக்ஸ் தளத்தில் முதல் வாரமே 24 லட்சம் பார்வைகளை பெற்று இந்திய அளவில் 3வது இடத்தை பிடித்தது.
இரண்டாம் வாரத்தில் 33 லட்சம் பார்வைகளை பெற்று முதலிடத்தை கைப்பற்றிய ‘தக் லைஃப்’, தியேட்டரில் தோல்வியடைந்தாலும் OTT-யில் வெற்றியை பெற்றது.