சென்னை வந்தாலும் தியாகராய நகரில் உள்ள குடும்ப வீட்டில் தங்காமல் ஹோட்டல்களில் தங்கிவரும் ஜோதிகாவுக்காக, சூர்யா தற்போது கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) புதிய வீடு ஒன்றை கட்டி வருகிறாராம்.
சூர்யா–ஜோதிகா மும்பையில் தங்குவதற்கான முக்கிய காரணம் ஜோதிகாவின் தாயார் உடல்நலம் மற்றும் பிள்ளைகளின் படிப்பு என்று தெரிகிறது. ஆனால் படப்பிடிப்பு வேலைகளுக்காக சென்னை வரும்போது, ஜோதிகா குடும்ப வீட்டில் தங்காமல் ஹோட்டல்களில் தங்குவது ஏன் என்ற கேள்விகள் எழுந்தன.
இந்தப் பின்னணியில், ஜோதிகா சென்னைக்கு வந்தால் அவருக்கே தனியாக வசிப்பதற்காக சூர்யா இந்த புதிய வீட்டு திட்டத்தை தொடங்கியதாக மூத்த பத்திரிகையாளர் அந்தணன் தெரிவித்துள்ளார்.