இமாசல பிரதேசம், இயற்கை அழகு மற்றும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக இருந்தாலும், பருவமழை காலங்களில் கடுமையான பாதிப்புகளை சந்திக்கிறது. இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை முன்னதாகவே தொடங்கி, தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது.இந்த மழையால் நிலச்சரிவு, வெள்ளம், மேகவெடிப்பு, மின்சாரம் தாக்குதல் போன்ற பல்வேறு பேரிடர்கள் ஏற்பட்டு வருகின்றன. இதன் காரணமாக இமாசலில் இதுவரை 105 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 61 பேர் மழை சம்பவங்களிலும், 44 பேர் சாலை விபத்துகளிலும் உயிரிழந்துள்ளனர்.மண்டி, காங்ரா, குல்லு உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. மொத்தமாக ரூ.78 கோடி மதிப்பிலான சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், மண்டி மாவட்டத்தில் மட்டும் ரூ.10 கோடி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விவசாயம், தோட்டம் மற்றும் கால்நடைகள் தொடர்பான சேதங்களும் குறிப்பிடத்தக்கதாக உள்ளன.