சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்திய பேட்டியில் இனி இளம் ஹீரோயின்களுடன் ஜோடி சேர மாட்டேன், வயதிற்கு ஏற்ற கதாபாத்திரங்களையே தேர்ந்தெடுப்பேன் என அறிவித்துள்ளார். “உங்கள் அன்பால் தான் இன்று வரை இருக்கிறேன், அதற்கு மரியாதை கொடுப்பேன்” என்றும் கூறியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், இன்னும் இளம் ஹீரோயின்களுடன் பாடல்களில் நடனம் ஆடும் தெலுங்கு நடிகர் பாலைய்யாவுடன் ஒப்பிட்டு, “ரஜினியைப் போல நடக்கக் கற்றுக்கொள்ளுங்கள்” என விமர்சித்து வருகின்றனர்.