விஜய் டிவி மூலம் பிரபலமான தொகுப்பாளினி திவ்யதர்ஷினி (டிடி), சமீபத்திய பேட்டியில், பெண்களுக்கு பிடிக்கும் ஆண் பற்றி வெளிப்படையாக பேசினார். "வெளியில் ரவுடி போல் தோன்றும் ஆண் அல்ல, குடும்பத்தில் மனைவியுடன் சமமாக இருந்து, சமைக்க, வேலைகளில் உதவிசெய்து, வெளியே போகும்போது மனைவியின் கைகளை பிடித்து, பை தூக்கிச் செல்லும் ஆள்தான் உண்மையான ஆண்மையுடையவன்" என்று டிடி தனது எண்ணத்தை பகிர்ந்தார்.