தமிழ் திரையுலகில் நீண்ட நாள் நண்பர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன், மீண்டும் ஒருகட்டத்தில் சந்தித்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினராக பதவி பெற்ற மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள, ரஜினியின் இல்லத்திற்கு சென்ற கமல், அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, "என் புதிய பயணத்தை நண்பர் ரஜினியுடன் பகிர்ந்து மகிழ்கிறேன்" என பதிவிட்டார்.