தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன், சமீபத்தில் வெளிவந்த அமரன் படத்தின் வெற்றியுடன் ரசிகர்களின் மனதை வென்றார். தற்போது, அவர் குடும்பத்துடன் பனையூரில் வசித்து வருவார். ஆனால், தற்போது அவர் பனையூரில் உள்ள வீட்டை இடித்துவிட்டு, அதற்கு பதிலாக மாடர்ன் பங்களா கட்ட திட்டமிட்டுள்ளார்.இதனால், சிவகார்த்திகேயன் பனையூரிலிருந்து சென்னை ஈசிஆர் பகுதிக்கு, தயாரிப்பாளர் போனி கபூரின் வீட்டுக்குத் தற்காலிகமாக குடிபெயர உள்ளார். இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.